News November 3, 2025
விஜய்யின் கூட்டணி கணக்குதான் என்ன?

பாஜக வீசும் கூட்டணி வலையில் சிக்காமல் இருக்க சுறா போல எதிர்நீச்சல் போடுகிறாராம் விஜய். அதாவது, பாதிக்குப் பாதி சீட், கேட்கும் தொகுதிகளை கொடுக்கவேண்டும், CM வேட்பாளர் குறித்து தற்போதைக்கு அறிவிக்கக்கூடாது என பல டிமாண்டுகளை விஜய் அடுக்குகிறாராம். இதனால், விஜய்யை எப்படி கூட்டணிக்குள் இழுப்பது என தெரியாமல் காவி புள்ளிகள் தலைசுற்றிபோய் இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News November 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
News November 4, 2025
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News November 4, 2025
கோவை கொடூரத்திற்கு போதை கலாசாரமே காரணம்: வைகோ

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவம் ஒரு கொடூர நிகழ்வு என வைகோ தெரிவித்துள்ளார். தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தும் இத்தகைய குற்றங்களுக்கு மதுப்பழக்கமும், போதை கலாசாரமுமே அடிப்படையாக இருக்கின்றன என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


