News February 28, 2026
விஜய்யின் கதை நேற்றுடன் முடிந்தது: தமிமுன் அன்சாரி

விஜய்யிடம் விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனு நேற்று வெளியானது. இதனையடுத்து, அந்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சிகள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், திமுக VS தவெக என விஜய் சொன்ன கருத்து நேற்று மாலை 5 மணியோடு முடிந்து விட்டது. அது என்னவென்று உங்களுக்கே புரியும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
எதற்காக பாஜக அரசு அஞ்சுகிறது? CM ஸ்டாலின்

கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது X பதிவில் அவர், ஜனவரி டூ ஜூலை வரையிலான அகழ்வாராய்ச்சி காலத்தில் பணிகளை தவறவிட்டால், பருவமழையால் பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏற்கெனவே ஒதுக்கிய நிதி வீணாகும் என கூறியுள்ளார். மேலும், எதற்காக அனுமதி தருவதற்கு பாஜக அரசு அஞ்சுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 3, 2026
தவெக பக்கம் சாய்கிறதா காங்கிரஸ்?

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 2 நாள்களே உள்ள நிலையில், <<19272775>>திமுக-காங்., தொகுதிப்<<>> பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதில் திமுக கூட்டணி 4 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதால், ராஜ்ய சபா சீட் வேண்டுமா அல்லது வேண்டாமா என இன்று மாலைக்குள் முடிவெடுக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகும் <<19281967>>தவெகவுடன் காங்.,<<>> பேச்சுவார்த்தை நடத்துவதால் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
News March 3, 2026
S-400 சுதர்சன் சக்ரா.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்

ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 சுதர்சன சக்ரா வான் பாதுகாப்பு கவச வாகனங்களை (S-400) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், கூடுதலாக சில ஏவுகணைகளையும் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை ஆப்ரேஷன் சிந்தூரின் போது திறம்பட செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, ஒப்பந்தத்தின்படி ரஷ்யா இன்னும் இரண்டு S-400 வாகனங்களை வழங்க வேண்டும்.


