News December 10, 2025

விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்

image

தவெக மாநில நிர்வாகிகள் & மாவட்ட செயலாளர்களுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், அடுத்தக்கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம், SIR, பூத் கமிட்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணங்கள் எங்கே என்பது குறித்த தகவல் வெளியாகலாம்.

Similar News

News April 2, 2026

திமுகவுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல அமைப்பு

image

வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லையென தென்னிந்திய மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது. 2021-ல் திமுக சார்பில் வெற்றிபெற்ற மீனவர் சமுக வேட்பாளருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கோரிக்கை வைத்ததாக தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, இம்முறை வாய்ப்பும் அளிக்காததால் திமுகவை புறக்கணித்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளார்.

News April 2, 2026

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் 2, பங்குனி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News April 2, 2026

கடற்படையில் வேலை.. +2 தகுதி போதும்

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மாலுமி பணிக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்வில் குறைந்தபட்ச 50% தேர்ச்சி போதுமானது. நுழைவுத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!