News January 1, 2026
விஜய்யால் பாஜகவுக்கு சவால்: SG சூர்யா

விஜய்க்கு இருக்கும் திரைக்கவர்ச்சி பின்னணி, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு சவாலாக இருப்பதாக SG சூர்யா கூறியுள்ளார். திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ பாஜகவுக்கு இல்லை என்ற அவர், தவெகவை விடவும் பன்மடங்கு அதிகமாக பாஜக உழைத்தால் மட்டுமே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும், தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
பொங்கல் பரிசு – குறை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

விழுப்புரம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலில் குறை இருந்தால் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். இந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து பொங்களுக்கு முன்னரே முழுமையாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏதாவது குறை இருந்தால் 04146223264 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 9, 2026
BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று வழங்க உத்தரவு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A <<18789661>>தணிக்கை சான்றிதழ்<<>> வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் நீதிபதி ஆஷா ரத்து செய்துள்ளார். முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீஸை ஜன.9-ல் (இன்று) இருந்து ஒத்திவைப்பதாக தெரிவித்த படக்குழு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.
News January 9, 2026
கனமழை வெளுக்கும்.. எப்போது கரையை கடக்கும்?

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இலங்கையின் யாழ்ப்பாண – திரிகோணமலை இடையே கரைக்கும் கடக்கும் என்றும், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.


