News January 2, 2026
விஜய்க்கு ஹிட் கொடுத்த மியூசிக் டைரக்டர்ஸ்!

நடிகர் விஜய்யின் சினிமா கரியரில் காதல் பாடல்கள் மட்டுமல்லாமல், தியேட்டரை அதிர வைத்த ஓப்பனிங் மாஸ் பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. விஜய்க்கு மறக்க முடியாத ஹிட் பாடல்களை வழங்கியவர்கள் லிஸ்டில் அனிருத் மட்டுமல்லாமல் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
Similar News
News January 5, 2026
திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைகிறார்

அதிமுக தலைவர்களை தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைகின்றனர். பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சி.சுந்தரபாண்டியன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், புதுச்சேரி அதிமுக முன்னாள் MLA பெரியசாமி உள்ளிட்டோர் சற்றுநேரத்தில் தவெகவில் இணைகின்றனர்.
News January 5, 2026
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

யார் கூட்டணிக்கு வந்தால் என்ன? வரலன்னா என்ன? நம்ம அடுத்த வேலைய பார்ப்போம் என அடுத்த கட்ட கட்சி வேலைகளில் விஜய் கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. அதாவது, தொகுதி நிலவரம், மக்கள் செல்வாக்கு, சாதிய பின்னணி என அனைத்தையும் அலசி ஆராய்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அவர் தயார் செய்து வைத்திருக்கிறாராம். கட்சிக்கு அப்பாற்பட்ட பலரின் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
News January 5, 2026
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் நீட்டிப்பு!

ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரத்தை இன்றிலிருந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை IRCTC நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு, முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. அதனையடுத்து காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய பயனர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


