News November 22, 2025
விஜய்க்கு சொன்ன கதையில் ரஜினி நடிப்பாரா?

ரஜினியின் 173 படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை ஒன்றை சொல்லியுள்ளாராம். இது விஜய்க்கு சொல்லப்பட்டு சில காரணங்களால் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் நின்ற கதையாம். ஆக்ஷன் சப்ஜக்ட்களில் இருந்து விலக நினைக்கும் ரஜினி, கலகலப்பான ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Similar News
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
News November 23, 2025
மீண்டும் அதே தவறை செய்கிறாரா விஜய்?

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சி மீது பழிபோட்டார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சியில் மக்களுடனான சந்திப்பில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ’என்னை ஏன் தொட்டோம், என் மக்களை ஏன் தொட்டோம்னு வருந்துவீங்க’ என பேசியிருக்கிறார். இதனால், மீண்டும் PUNCH வசனம் பேசி கரூர் மேட்டரில் ஆளும் தரப்பை அவர் கைகாட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 23, 2025
ஏலியனுடன் பேசினாரா USA முன்னாள் அதிபர் புஷ்?

ஏலியன்கள் பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘The Age of Disclosure’ ஆவணப்படம் மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. அதில், முன்னாள் USA அதிபர் ஜார்ஜ் HW புஷ்-க்கு ஏலியன்கள் பற்றி தெரியும் என்று விண்வெளி இயற்பியலாளர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். 3 UFO விண்கலங்கள் பூமிக்கு வந்ததாகவும், ஏலியன்கள் CIA-வை தொடர்பு கொண்டதாகவும் புஷ் கூறியதாக டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.


