News January 18, 2026
விஜய்க்கு கபில்சிபல் எச்சரிக்கை!

பாஜகவுடன் சமரசம் செய்தால் DCM பதவி கிடைக்கலாம், ஆனால் உங்கள் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என MP கபில்சிபல் கூறியுள்ளார். மேலும், வெற்றிபெற முடியாத மாநிலங்களில் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் BJP கூட்டணி அமைக்கும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் புறக்கணிக்கும் எனவும், அதை TN-ல் முயற்சிப்பதாகவும் எச்சரித்துள்ளார். விஜய்யை NDA கூட்டணிக்குள் இழுக்க BJP முயற்சிப்பதாக பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 24, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் திமுகவில் உள்கட்சி பூசல் நிலவுகிறதாம். இது விஜய்க்கு சாதகமாக அமையும் என்பதால் இதுகுறித்த தீவிர ஆலோசனையில் தவெக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய Official தகவலுக்காக காத்திருப்போம்.
News January 24, 2026
12 தொகுதிகள்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த கமல்

திமுகவுடன் கமலின் மநீம விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மநீமவுக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக வலியுறுத்தும் நிலையில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட கமல் உறுதியாக இருப்பது அறிவாலய தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
News January 24, 2026
தங்கம், வெள்ளி.. இன்று ஒரே நாளில் ₹10,000 மாறியது

<<18941567>>தங்கம் விலையை<<>> தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று (ஜன.24) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹355-க்கும், 1 கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று காலை கிலோவுக்கு ₹20,000 உயர்ந்த வெள்ளி விலை மாலையில் ₹15,000 குறைந்தது. இந்நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


