News December 18, 2025
விஜய்க்கு ஓட்டு போடலனா விஷம் தான்: பெண் தொண்டர்

விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும், மக்களுக்கு நல்ல சலுகைகளை வழங்குவார் என இளம்பெண் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு பரப்புரையில் கலந்துகொண்ட அப்பெண், தனது வீட்டில் 9 பேர் வாக்களிக்கும் தகுதியுடன் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என்றார். ஒருவேளை விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால், சோற்றில் விஷம் வைத்துவிடுவேன் என்று கேலியாக தெரிவித்தார்.
Similar News
News December 23, 2025
50 காசு செல்லும்.. இது தெரியுமா உங்களுக்கு?

ஏறக்குறைய இல்லாமல் போன 50 காசு இன்றும் சட்டப்படி செல்லும் என்று RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, 50 காசு நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்கவில்லை. எனவே, நீங்கள் ₹.50 காசு கொடுத்து பொருள்கள் வாங்க முடியும். வியாபாரிகள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் ₹.50 காசை வாங்குவதில்லை. இதனால், பல இடங்களில் ₹.50-க்கு பதில் ₹1 கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது. உங்ககிட்ட 50 காசு இருக்கா?
News December 23, 2025
ராசி பலன்கள் (23.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 22, 2025
அறிவுத் தீ அணையாததால் கலவர தீ பற்றவில்லை: CM

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அரை மணி நேரமாவது புத்தகங்கள் படியுங்கள் என கூறியுள்ளார். தமிழகத்தில் அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான், கலவரத் தீயை பற்ற வைக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


