News January 2, 2026

விஜய்க்கு எதிராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்

image

‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. தனது ‘செம்மொழி’ கதையை திருடி ‘பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தடை கோரியும் உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பராசக்தி’ படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. இதனால், பொங்கல் ரேஸில் விஜய்க்கு எதிராக SK களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

Similar News

News January 6, 2026

திருப்பத்தூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

image

1.திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில், 2.பசலிக்குட்டை முருகன் கோயில், 3.லட்சுமிபுரம் கோயில், 4.திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில், 5.திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், 6.மயில் பாறை முருகன் கோயில், 7.வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில், 8.பாராண்டப்பள்ளி சிவன் கோயில், 9.கந்திலி வெக்காளியம்மன் கோயில், 10.பாப்பாயி அம்மன் கோயில். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

8 குழந்தைகள் பெத்துக்கோங்க… உங்களை யார் தடுத்தது?

image

இந்துக்கள் குறைந்தது 3 முதல் 4 குழந்தைகளை பெற்றெடுக்காவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறும் என பாஜக நிர்வாகி நவ்னீத் ராணா சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, எனக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவரோ 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறார். நான்கு ஏன், எட்டு குழந்தைகள் கூட பெற்றுக்கொள்ளுங்கள், உங்களை யார் தடுக்கிறார்கள்? என்றார்.

News January 6, 2026

வெளிநாட்டு ராணுவத்தில் லாலுவின் பேரன்

image

லாலு பிரசாத் யாதவின் பேரன் ஆதித்யா வெளிநாட்டு ராணுவத்தில் பணியாற்றவிருப்பது பேசுபொருளாகியுள்ளது. சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட ஆதித்யா, அந்நாட்டு விதிகளின்படி 2 ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும். இதுபற்றி ஆதித்யாவின் தாய் ரோகிணி X-ல் உருக்கமாக பதிவிட்டதற்கு, நெட்டிசன்கள் அவரை சாடுகின்றனர். பிறப்பால் இந்தியரான நீங்கள், இந்த விஷயத்தில் பெருமைகொள்வது சரியா என கேள்வி கேட்கின்றனர்.

error: Content is protected !!