News December 22, 2025
விஜய்க்கு இதெல்லாம் தேவையே இல்லை: நாஞ்சில் சம்பத்

பூத் கமிட்டிக்கென தவெகவினர் மெனக்கெடத் தேவையில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அந்தளவுக்கு விஜய்க்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், ஊழியர் கூட்டம், செயல்வீரர் கூட்டம் என்பதெல்லாம் விஜய்க்கு தேவையே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எல்லாம் மிகச் சரியாகவே இருக்கிறது எனவும், பொதுமக்கள் அவர்மீது மாறாத பாசத்தையும் பற்றையும் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News December 23, 2025
இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.
News December 23, 2025
வெள்ளியில் முதலீடு செய்வது சரியா?

நடப்பாண்டின் துவக்கத்தில் ₹90,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.14 லட்சமாக ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகிறது. எனினும் வெள்ளி முதலீட்டில் லாபம் சீராக கிடைப்பதில்லை. எனவே தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் கலந்து முதலீடு செய்தால், வரும் காலத்தில் வெள்ளி விலையில் அதீத மாற்றம் ஏற்பட்டால் தங்கம் அதனை சமன்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
News December 23, 2025
REWIND 2025: உலகளவில் என்னென்ன நடந்தது?

இந்த 2025-ல் உலகளவில் என்னவெல்லாம் நடந்தது தெரியுமா? இயற்கை பேரிடர், இருநாடுகளிடையே போர், அரசியல் தலைவர்கள் சந்திப்பு, போராட்டம், விபத்து என மறக்க முடியாத ஏராளமான விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் மிக முக்கியமான, மறக்க முடியாத நிகழ்வுகளை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


