News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News February 14, 2026
மகளிருக்கு மேலும் ₹5,000.. மகிழ்ச்சி தகவல்

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைகால சிறப்புத் தொகை ₹2,000 என ₹5,000 நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், மேலும் ஒரு ₹5,000-ஐ மகளிரின் வங்கிக் கணக்கில் வரவுவைக்க அரசு திட்டமிடுகிறதாம். இது கடனுதவி (அ) சுயதொழில் தொடங்குவதற்கான நிதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.
News February 14, 2026
காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை: பியூஸ் கோயல்

மக்களை நாளுக்கு நாள் தவறான அறிக்கைகளால் காங்கிரஸ் தவறாக வழிநடத்துவதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். மும்பையில் பேசிய அவர், சோர்வடைந்த காங்கிரஸிடம் குழப்பம் பரப்புவதை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை என குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணாமூல் உள்ளிட்டவை எவ்வளவு முயன்றாலும், அவர்களால் PM மோடியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
FLASH: புதுவையில் 9.44 லட்சம் வாக்காளர்கள்!

SIR பணிகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 5,00,477 பெண்கள், 4,43,595 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 139 பேர் என மொத்த 9,44,211 பேர் இடம் பெற்றுள்ளனர். இறப்பு, இடமாற்றம், இருமுறை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 16,619 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது.


