News January 14, 2026
விஜய்க்கு ஆதரவு.. திமுக அதிர்ச்சி

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக <<18845192>>ராகுல் காந்தி<<>>, குரல் கொடுத்துள்ளது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ‘பராசக்தி’ படத்தில் காங்கிரஸுக்கு எதிராக தவறான காட்சிகள் உள்ளதாக <<18844133>>காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு<<>> கிளம்பியுள்ளது. ஏற்கெனவே, காங்., MP-க்கள், மூத்த தலைவர்கள் கூட்டணி, ஆட்சியில் பங்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறி வருவதால் திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது.
Similar News
News February 3, 2026
தொகுதி மாறுகிறாரா சீமான்?

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 2021 தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தை குறிவைத்துள்ளாராம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும், பிப்.21-ல் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 3, 2026
படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.
News February 3, 2026
BREAKING: மீண்டும் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றுமுதல் 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், தென் & டெல்டா மாவட்டங்களில் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!


