News October 26, 2024

விஜய்க்கு ஆதரவு.. ஆஹா இது புதுசா இருக்கே!

image

தமிழ்நாட்டு அரசியலில் இருபெரும் கழகங்களுக்கு மாற்றாக வரலாற்றை மாற்றி எழுதி புதிய சகாப்தம் படையுங்கள் என்று விஜய்க்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மநீமவில் முக்கிய பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய அவர், தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், கமலின் அரசியலை விமர்சித்த அவர், விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு கூறியுள்ளார்.

Similar News

News August 24, 2025

இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

image

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.

News August 24, 2025

10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

image

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

News August 24, 2025

லேடன் தெரியுமா? பின்லேடன்: USA-க்கு நினைவூட்டல்

image

பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் நிலையில், பழைய வரலாற்றை அமெரிக்கா மறந்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தேடிய பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாக கூறினார். தங்களது வசதிக்கேற்ப அரசியல் செய்வதை இரு நாடுகளுமே விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!