News January 10, 2026
விஜய்க்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்

‘ஜனநாயகன்’ படத்துக்கு எழுந்த சிக்கலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில் ‘ஜனநாயகன்’ வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை என இயக்குநர் விக்ரமன் பதிவிட்டுள்ளார்.. அதேபோல் சென்சார் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என்று இயக்குநர் பா ரஞ்சித் சாடியுள்ளார். நடிகர் சிபிராஜும் விஜய்க்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.
Similar News
News January 27, 2026
வெயிட்டை குறைக்க வெறி.. நோயாளியான பெண்

சீனாவில் பெண் ஒருவர், தனது தோழியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாக நிற்க, உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் 2 மாதங்களில் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்தார். அவர் மேற்கொண்ட தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு காரணமாக, தலைசுற்றல் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டன. டாக்டரை அணுகியபோது, அவருக்கு prediabetes நோய் ஏற்பட்டது தெரிந்தது.
News January 27, 2026
ராசி பலன்கள் (27.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
இந்தியா வரும் கனடா பிரதமர்

கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வருகைதர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. யுரேனியம், எரிசக்தி, கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலத்தில் இந்தியா – கனடா இடையே உறவு மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


