News January 8, 2026

விஜய்க்கு ஆதரவாக இணைந்த சினிமா பிரபலங்கள்

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக கோலிவுட்டிலும் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் சினிமாவே ஆபத்தில் இருப்பதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் <<18792194>>அஜய் ஞானமுத்து<<>> நடிகர்கள் ரவி மோகன் சிபிராஜ், வெங்கட் பிரபு, கிஷன்தாஸ், நடிகை சனம் ஷெட்டி ஆகியோரும் ஆதரவாக பேசியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 13, 2026

21 நாட்கள் விதி தெரியுமா?

image

பிடிக்காத அல்லது கெட்டப் பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி பழக்கமாக்க வேண்டுமா? இதற்கு 21 நாட்கள் விதி கைக்கொடுக்கும் என்கின்றனர். எந்த ஒன்றை தினசரி தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்கிறோமோ, அது அப்படியே தினசரி பழக்கமாகிவிடும் என்கிறது 21 நாட்கள் விதி. இதையே 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

News February 13, 2026

திமுககாரர் வீட்டில் ஓட்டு கேட்காதீங்க

image

அதிமுக வேட்பாளராக யார் நின்றாலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். அதற்காக திமுககாரர் வீட்டில் போய் ஓட்டு கேட்கக்கூடாது; அவர்கள் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார். ஒவ்வொரு வாக்கு சாவடியில் உள்ளவர்களும் தரவுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

News February 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். ▶பொருள்: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

error: Content is protected !!