News December 26, 2025

“விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர்” – ம.தி.மு.க நிர்வாகி காட்டம்

image

உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செந்திலதிபன் பங்கேற்று, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது, “த.வெ.க., தலைவர் விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர், பிறர் எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி பழக்கப்பட்டவர். போக, போக அவர் யார் என தெரியும், விஜயின் சாயம் வெளுக்கும்” என்று பேசினார்.

Similar News

News December 27, 2025

FLASH: உளுந்தூர்பேட்டையில் 2 சடலங்கள் மீட்பு!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று (டிச.27) காலை 2 வாலிபர்களின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2025

கள்ளக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் இரவில் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: கரடிசித்தூரைச் சேர்ந்த சிரில் சலோனா (32), கிறிஸ்துமஸ் அன்று தனது வீட்டை பூட்டி விட்டு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 5.5 பவுன் நகை, ரூ.70,000 திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சலோனா, போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று கிறிஸ்துமஸ் இரவில் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: குளிர் காய்ந்த பெண் தீயில் கருகி பலி!

image

வெள்ளிமலையை சேர்ந்தவர் ஜோதி (57). இவர் குளிருக்காக இரும்பு சட்டியில் தீ மூட்டி தனது காலுக்கு கீழ் வைத்துவிட்டு தூங்கிவிட்டார். அதிலிருந்து அவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் அலறித்துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!