News March 23, 2024
விஜயபிரபாகர் வெற்றி பெறுவார்: ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை தலைமை அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய தொண்டர்கள் சுழன்று வேலை பார்ப்பார்கள் என்றார்.
Similar News
News August 16, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
இயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்

இரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி எழுதிய கடிதத்தில்; “தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. தமிழ் கேள்வித்தாளுடன் மறு தேர்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
News August 16, 2025
மதுரை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <