News December 8, 2025
விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

அதிமுக Ex அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டிற்கு ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 15, 2025
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார்?

<<18561882>>ஆஸ்திரேலிய<<>> துப்பாக்கிச்சூட்டில், 10 வயது சிறுமி உள்பட பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பழக்கடை வியாபாரியான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் என தெரிய வந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் போதே போலீஸார் சுட்டதில் சஜித் உயிரிழந்ததாக கூறினர். நவீத் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 15, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $29.38 உயர்ந்து, $4,324.69-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் அதிகரித்து வரும் நிலையில், டிச.13-ம் தேதி நிலவரப்படி சவரன் ₹98,960-க்கு விற்பனையானது.
News December 15, 2025
பாஜகவுக்கு எதிராக விஜய் பேசுவதில்லை: பெ.சண்முகம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அணுகுமுறை மாறிவிட்டதாக சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று முன்னர் கூறி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலுமே பாஜகவை பற்றி பேசவில்லை என விமர்சித்துள்ளார். சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் தான், பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


