News November 19, 2024

விசிக தலைவருடன் திமுக நிர்வாகி சந்திப்பு

image

சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News April 7, 2026

மயிலாடுதுறை: புகார் அளிக்க முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை, C-VIGIL செயலியில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பிரச்சாரம் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குதல், வெறுப்பு பேச்சு மற்றும் இதர தேர்தல் தொடர்பான புகார்களை, உரிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம், புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

News April 7, 2026

மயிலாடுதுறை: வேட்பாளரிடம் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

image

மயிலாடுதுறை, சேத்திரபாலபுரம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் லாரன்ஸ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் சசிகலா தலைமையிலான, இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக சீர்காழி தொகுதி வேட்பாளர் மாலதி என்பவர், உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.5.50 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 7, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.6) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!