News June 14, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10இல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலை 11 மணிமுதல் விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தினந்தோறும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிறு, திங்கள் தவிர்த்து 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ல் நடைபெறும்.
Similar News
News March 1, 2026
விழுப்புரம்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

விழுப்புரம் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : <
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க.SHARE
News March 1, 2026
விழுப்புரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
விழுப்புரம்: பாஜக – திமுக வினரிடையே மோதல்

திருவெண்ணைநல்லூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசியவர் திமுகவைப் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதில் திமுகவைச் சேர்ந்த சிலர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதனால் திமுக பாஜக இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


