News July 3, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எந்த விரலில் மை?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த விரலில் மை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தமட்டில் அந்த மை அழியாமல் இருந்தால் இடது கை நடுவிரலிலும், அழிந்திருந்தால் ஆள்காட்டி விரலிலும் வைக்கப்படும் என தேர்தல் துறை பதில் அளித்துள்ளது.

Similar News

News September 12, 2025

விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <>இந்த<<>> லிங்க் / மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 12, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மழை அளவு நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(செப்.11) பதிவான மழையின் அளவு
▶️ ஆனந்தபுரம் – 45.2 மிமீ
▶️ முண்டியம்பாக்கம் – 38 மிமீ
▶️ நெமூர் – 29.2 மிமீ
▶️ கஞ்சனூர் – 26.4 மிமீ
▶️ சூரப்பட்டு – 20 மிமீ
▶️ கோலியனூர் – 18 மிமீ
▶️ வளவனூர் – 16 மிமீ
▶️ விழுப்புரம் – 14 மிமீ
▶️ கேதார் – 14 மிமீ
▶️ முகையூர் – 12 மிமீ
▶️ வானூர் – 12 மிமீ
இன்றும்(செப்.12) மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

தென்பெண்ணை ஆறு: வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணை நீர்த்தேக்க விதியின்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அணையின் நீர்மின் நிலையத்தின் வழியாக முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!