News July 12, 2024
விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த தொகுதிக்கு கடந்த ஜூலை 10 இடைத்தேர்தல் நடந்தது. திமுகவின் அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டநிலையில், இவர்கள் மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், வாகைசூடப் போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News July 9, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 8, 2025
விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
விழுப்புரத்தில் பழங்குடி இளைஞர்களுக்கு அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்ப மாதிரி விண்ணப்பம் மற்றும் மற்ற விபரங்கள் www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2025