News February 25, 2026
விக்கிரவாண்டியில் சிறுவன் பரிதாப பலி!

விழுப்புரம்: கொட்டியாம்பூண்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் வெற்றி குணவேல் (11) நேற்று முன்தினம் வீட்டின் முன் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் சிக்கி இறுகியது. தொடர்ந்து பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(03) இரவு 10 மணி முதல் மார்ச்- (04)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 3, 2026
திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறப்பு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் சார்பில் சென்னை பசுமை வழிச்சாலை முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தை குறிஞ்சி இல்லத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறனகம் சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகம் மையத்தினை ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்