News September 16, 2025
விகேபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலணியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கிருந்து கிளம்பிய புகையால் கட்டபொம்மன் காலணியில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Similar News
News September 16, 2025
நெல்லை: கழுத்து அறுத்துக் கொல்லபட்ட ஆடு

பணகுடி அருகே தண்டையார் குலத்தை சேர்ந்தவர் உள்ள முடையார் (44). இவரது ஆடுகள் வேப்பிலங்குளத்தை சேர்ந்த சகாயம் என்பவரது தோட்டத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரு ஆடு கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது. இதற்கு சகாயம் தம்பதிகள் காரணமாக இருக்கலாம் என உள்ள முடையார் அளித்த புகாரின் படி பணகுடி போலீசார் சகாயம் தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 16, 2025
நெல்லை: மகனுக்கு கஞ்சா எடுத்துச் சென்ற தாய்..!

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த லலிதா, சிறையில் உள்ள தனது மகன் வினோதைப் பார்க்க பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றார். அவர் கொண்டு வந்த பேரீச்சம்பழங்களில் 3 கிராம் கஞ்சா மறைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை அலுவலர் புகாரில், லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
நெல்லை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <