News August 21, 2025
விஐடி பல்கலை.யுடன் இணைந்த முன்னணி நிறுவனம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஐஎம் நியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஆக.20) கையெழுத்தானது. விஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார், செயல் இயக்குநர் சந்தியாபென்ட ரெட்டி, துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Similar News
News February 11, 2026
வேலூர்: சீட்டு பிரச்சனையில் அடிதடி முடிவு!

குமரப்பநகரை சேர்ந்த ஏட்டு சிவக்குமார் (45), மாதச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் அப்பகுதி முன்னாள் ராணுவ வீரர் பத்ரிசேகர் (42 ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்து ரூ.4 லட்ச சீட்டை எடுத்தார். பின் 6 மாதங்களாக சீட்டு கட்டாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார், பத்ரிசேகரை தாக்கியுள்ளார். இதன் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 11, 2026
வேலூர்: வீடு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி!

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், பிலீப்ரிச்சர்ட் (49). இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி வீடு திரும்பிய குடும்பம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


