News February 26, 2026
வாவ்.. எப்பேர்ப்பட்ட சிந்தனை! VIRAL PHOTOS

இந்த போட்டோக்களை சட்டென பார்த்தால், ஒரே படம் போல தான் தெரியும். ஆனால், அவை இருவேறு போட்டோக்களாகும். இரண்டு படங்களை கச்சிதமாக ஒன்றிணைத்து, உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார், Fontanesi என்ற கலைஞர். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்கவும். இத நீங்க மட்டும் ரசிக்காம, நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இவற்றில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எது?
Similar News
News February 28, 2026
ஈரானுடன் நீண்ட போர் இருக்காது: ஜே.டி.வான்ஸ்

ஈரான் மீது தாக்குதல் நடந்தாலும், அது நீண்ட போராக இருக்காது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதை தடுக்க டிரம்ப் நிர்வாகம் ராணுவ மற்றும் ராஜதந்திர உத்திகளை பரிசீலித்து வருவதாகவும், கடந்த காலத்தில் ஈராக் போர் போன்ற தவறுகள் மீண்டும் நிகழாது என்றும் அவர் கூறினார். மேலும் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறினார்.
News February 28, 2026
வரலாற்றில் இன்று

*1986 – சுவீடன் பிரதமர் ஓலாஃப் பால்மே சுட்டுக் கொல்லப்பட்டார். *2002 – குஜராத் வன்முறையில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர். *2006 – சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். *1921 – தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த தினம். *2003 – தமிழ் நடிகர் மேஜர் சுந்தரராஜன் மறைந்த நாள். *ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
News February 28, 2026
வாயு தொல்லையா? இந்த பழங்களை தவிர்க்கவும்

நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் சில பழங்களை அடிக்கடி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, மாங்காய், புளிப்பு திராட்சை ஆகியவை அமிலத்தன்மை அதிகம் கொண்டதால், வயிறு பிரச்னை உள்ளவர்கள் அளவாக உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களில் உள்ள அமிலத்தன்மை வாயு & நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து வாயு தொல்லை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


