News December 18, 2025
வாழப்பாடி விபத்தில் பவுன்சர் பலி – தோழி கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விமல்ராஜ்(23), பவுன்சராக பணியாற்றி வருகிறார். அவரது தோழி சிவகங்கை பகுதியைச் சேர்ந்த கலையரசி(30). இருவரும் டூவீலரில் சேலம் நோக்கி இன்று காலை சென்றனர். வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி அருகே சென்றபோது டூவீலர் தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமல்ராஜ் உயிரிழந்தார். கலையரசி சிகிச்சை பெற்று வருகிறார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 18, 2025
சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில், குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் விஜயா முன்னிலையில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள், சிறப்பு சிறார் காவல் உதவி பிரிவு ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆகியோருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குழந்தை நேய முறையில் அணுகுதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
News December 18, 2025
சேலம்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News December 18, 2025
ரேபிஸை ஒழிக்க தீவிரமாக செயல்படுமா ஒன்றிய அரசு?

ரேபிஸை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு செயல் திட்டம் வகுத்துள்ளதா? ரேபிஸை கட்டுப்படுத்துவதில் வீடு மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் குடிமக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவை? நாடாளுமன்றத்தில் நேற்று சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.


