News December 28, 2025

வாழப்பாடியில் வசமாக சிக்கிய ஆசிரியர்கள்!

image

வாழப்பாடி: பேளூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற 17 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஜெகதீசன் மற்றும் தினகரன் ஆகியோர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 30, 2025

சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

சேலம் வீரபாண்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்காக தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு உடலை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்

News December 30, 2025

ஏற்காடு: கழுத்தை நெறித்து கொன்ற காதலன்!

image

ஏற்காடு, மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி சடலமாக மீட்கப்பட்டார். வரம்பு மீறிய காதலில் ஏற்பட்ட தகராறில், சுமதியை அவரது காதலன் வெங்கடேஷ் (22) துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை கோணி பையில் கட்டி குப்பனூர் மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் வீசியதாக போலீசார் விசரானையில் தெரியவந்துள்ளது. பள்ளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

News December 30, 2025

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்

error: Content is protected !!