News March 31, 2025
வாழப்பாடியில் ஏப்.5- ல் ஜல்லிக்கட்டு!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரத்தில் வரும் ஏப்ரல் 05- ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. 500-க்கும் மேற்பட்ட காளைகள், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
சேலம்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 27, 2026
மேட்டூர்: பேருந்து பயணத்தில் நேர்ந்த விபரீதம்

மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது தாயார் சந்திரா. இவர் காஞ்சிகோவிலில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ச்சி ஒன்றில் வேலை முடிந்து, மேட்டூர் செல்லும் தனியார் பஸ்ஸில் நின்றபடி பயணித்தார். அப்போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது. இதில் சந்திரா பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தார். காயத்துடன் GH-ல் சேர்த்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 27, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<


