News October 21, 2025

வால்பாறையில் தொடரும் அவலம் கண்டுகொள்ளுமா அரசு?

image

கோவை வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டுகொள்ளுமா அரசு?

Similar News

News February 3, 2026

BREAKING: காரமடையில் யானை தாக்கி ஒருவர் பலி

image

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 3, 2026

கோவை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 3, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!