News February 4, 2026
வால்நட்ஸை இப்படி தான் சாப்பிடணும்!

வால்நட்டில் ஒமேகா 3, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. இந்நிலையில், அதை சாப்பிட சில முறைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, *உப்பில்லாத வால்நட்களை சாப்பிட வேண்டும் *8 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும், எலும்புகளை வலுப்படுத்தும் *தினமும் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவு சீராகும் *மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க காலை, மதியம் சாப்பிட வேண்டும்.
Similar News
News February 7, 2026
ஒரேநாளில் தலைகீழாக மாறிய வெள்ளி விலை

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.7) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கும் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்த வெள்ளி விலை இன்று அப்படியே தலைகீழாக அதிகரித்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 7, 2026
‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.
News February 7, 2026
பார்லி.,யில் பாஜகவினர் கத்திட்டே இருக்காங்க: TR பாலு

நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னாலே சிரிப்பாக வருகிறது என MP டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்றம் முறையாக நடப்பதில்லை என்ற அவர், ஒரு கருத்தை முன்வைக்க எழும்போதே, பாஜகவினர் கத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் 140 கோடி பேருக்கும் தலைகுனிவு என மக்கள் நினைப்பதாகவும் பேசியுள்ளார்.


