News March 18, 2024
வாலிபரை தாக்கி லேப்டாப், பணம் பறிப்பு

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அபியுதயா என்பவர் நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 4 பேர் அபியுதயாவை தாக்கி 2 லேப்டாப், செல்போன், ரூ.2000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 30, 2025
செங்கல்பட்டு: சாப்பாட்டு செலவு மட்டும் ரூ.4.51 லட்சமாம்..!

தாம்பரம் மாநகராட்சியின், 5வது மண்டலத்தில் ஆக.23ம் தேதி நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடத்தியதில், சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் செலவானதாக, நாளை நடக்க இருக்கும் மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மருத்துவ முகாம் நடத்தியதற்கு, சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க கருத்து என்ன?
News October 30, 2025
செங்கல்பட்டு: முக்கிய உதவி எண்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
செங்கை: இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்த ஐடி பெண் ஊழியர் வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏசி பழுதான நிலையில், அதை சரி செய்ய வந்த புரசைவாக்கம் அற்புதராஜ் (32), அருண் (31) இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றம் 2 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை 16,000 அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.


