News February 11, 2025

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டியில் நேற்று காரை வழிமறித்து, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்துக் காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

News August 16, 2025

திண்டுக்கல்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

image

அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!