News September 21, 2025

வாலாஜா பாகவதர் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

image

கர்நாடக சங்கீத உலகில் பெரும் ஜாம்பவானாக இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த வெங்கடரமண பாகவதர். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், புகழ்பெற்ற இசையமைப்பாளரான தியாகராஜரை தனது குருவாக ஏற்றார். தியாகராஜரின் கீர்த்தனைகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு, அவற்றைப் பலருக்கும் பரப்பினார். இவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது. ஷேர்!

Similar News

News November 10, 2025

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

image

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News November 9, 2025

ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!