News May 4, 2024
வாலாஜா: தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

வாலாஜா தாலுகா சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(58) கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News August 26, 2025
ராணிப்பேட்டையில் துவக்கி வைத்த அமைச்சர்

மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ராணிப்பேட்டை, வி.ஆர்.வி அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி துவக்கி வைத்தார். பின், மாணவர்களுடன் காலை உணவை உட்கொண்டார்.
News August 26, 2025
ராணிப்பேட்டையில் வேலை

ராணிப்பேட்டை இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மாத ஊதியம் ரூ.11,916 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04172-299347 என்ற எண்ணை அழைக்கவும்.
News August 26, 2025
ராணிப்பேட்டை: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <