News March 26, 2026
வாலாஜா டோல்கேட்டில் ரூபாய் 58 ஆயிரம் பறிமுதல்

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று மார்ச் 26 ஆம் தேதி பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 58 ஆயிரம் வைத்திருந்தது தெரிந்தது. பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News March 26, 2026
காலணி தொழிற்சாலையில் துண்டு பிரசுரங்கள் தேர்தல் அலுவலர்

புங்கனூர் ஊராட்சியில் உள்ள காலணி தோல் தொழிற்சாலையில் இன்று மார்ச்.26 ஆம் தேதி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News March 26, 2026
ராணிப்பேட்டை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.ராணிப்பேட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
ராணிப்பேட்டையில் பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


