News March 27, 2024
வாலாஜா அருகே பள்ளி ஆண்டு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள இந்து வித்யாலயா CBSE பள்ளியின் ஆண்டு விழா நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சன் டிவி பட்டிமன்ற பேச்சாளர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நடப்பு கல்வியாண்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Similar News
News February 14, 2026
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை நகரில் வருகின்ற பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை அன்று பழைய bsnl அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 300 பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக முகாம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை. மேலும் விவரங்களுக்கு 94 990 55 897 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News February 14, 2026
ராணிப்பேட்டையில் பரபரப்பு!

ராணிப்பேட்டை வண்டி மேட்டுச்சாலையில் பிசியோதெரபி கிளினிக் நடத்துபவர் டாக்டர் சரவணன் (36). கடந்த 12ம் தேதி இங்கு ஒரு பெண் சிகிச்சைக்காக தனது 17வயது மகளுடன் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு, டாக்டர் மகளிடம் அத்துமீற முயன்றுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்து போலீசார் டாக்டரை போக்ஸோவில் கைது செய்தனர்.
News February 14, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


