News March 14, 2025
வாலாஜாவில் வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வு

வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று நேரில் கள ஆய்வு செய்தார். அப்போது எத்தனை ஆண்டுகளாக எத்தனை பேர் குடியிருந்து வருகின்றனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை உடனிருந்தனர்.
Similar News
News March 3, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீஸில் குவிந்த மனுக்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். இதில், 590 மனுக்கள் பெறப்பட்டன. 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News March 3, 2026
ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னையை நோக்கி செல்லும்ரயில்களில் மர்மநபர்கள் சிலர் போதை மாத்திரை கடத்திவருவதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்ததும் ஆகாஷ்(23), மணிகண்டன்(24), தட்சிணாமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


