News March 15, 2026
வார்டு கவுன்சிலரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உங்கள் பகுதி பிரச்சனைகளை சரிசெய்யும் கவுன்சிலருக்கு 2023-ல் இருந்துதான் மாத சம்பளமே தொடங்கப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுக்கு மாதம் ₹10,000 சம்பளமாகவும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு ₹5,000-மும் ஊதியமாக வழங்கப்படுகிறது. நகராட்சி தலைவர்(₹15,000), துணை தலைவர்(₹10,000), பஞ்சாயத்து தலைவர்(₹10,000) துணை தலைவர்களுக்கும்(₹5,000) குறிப்பிட்ட ஊதியம் கொடுக்கப்படுகிறது.
Similar News
News April 7, 2026
தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.
News April 7, 2026
வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.
News April 7, 2026
‘மாம்பழம்’ சின்னம்: ஐகோர்ட்டை நாடிய ராமதாஸ்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சின்னத்தை முடக்க மறுத்து உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தியிருந்தது.


