News March 17, 2026

வாய்வழி செக்ஸ் மூலம் அதிகமாகும் தொண்டை கேன்சர்

image

தொண்டை புற்றுநோய் ஏற்பட வாய்வழி உறவில் (oral sex) ஈடுபடுவது முதன்மை காரணமாக மாறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு புகைப்பழக்கமே இதுவரை முதன்மை காரணமாக இருந்த நிலையில், US & UK-வில் நடந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் உறுதியாகியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அதிக நபர்களுடன் உடலுறவு கொள்வதாலும், HPV தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும் இவ்வகை புற்றுநோய் அதிகளவில் பரவுவதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 3, 2026

மாம்பழத்திற்கு எதிராக களமிறங்கும் G.K.மணி மகன்

image

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., – பாமக இடையே 3 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில், பாமகவின் பாடி செல்வத்தை எதிர்த்து காங்., சார்பில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் களமிறங்குகிறார். மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து காங்., சின் ஜமால் யூனுஸ் முகமது, சோளிங்கரில் சரவணனை எதிர்த்து முனிரத்னம் மோத இருக்கின்றனர்.

News April 3, 2026

இந்தியாவின் இளம் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பசி, தூக்கம் மறந்து நாட்டுக்காக தன்னலமற்று சேவையாற்றுபவர்கள் ஏராளம். அவர்களில் ஒரு மக்கள் நாயகனை இந்தியா இழந்துள்ளது. சிக்கிம் எல்லையில் பணியில் இருந்த உத்தரகாண்டை சேர்ந்த இளம் ராணுவ வீரர் விகாஷ் குமார்(24) இன்று காலமானார். ராணுவ மரியாதையுடன் அவரது உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரை போன்றவர்களின் தியாகம் என்றுமே போற்றுதலுக்குரியது. GREAT SALUTE

News April 3, 2026

5 சிட்டிங் MLA-க்களை கழற்றிவிட்ட காங்கிரஸ்

image

17 சிட்டிங் MLA-க்களில் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ள காங்கிரஸ், 5 பேரை கழற்றிவிட்டுள்ளது. குளச்சல் MLA பிரின்ஸ், தென்காசி MLA பழனி, மயிலாடுதுறை MLA ராஜ்குமார், உதகை MLA கணேஷ், விருத்தாசலம் MLA ராதாகிருஷ்ணனுக்கு தேர்தலில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!