News May 19, 2024
வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் மே.22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே.24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News April 9, 2026
புதுச்சேரி: வாக்குப்பதிவு பணியில் 4,836 அரசு ஊழியர்கள்

புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்தல் பணிக்காக மொத்தம் 4,836 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணிக்காக 2,791 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுமட்டும் அல்லாது, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
News April 9, 2026
புதுச்சேரி: மது கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு

புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலகத்தில் மதுக் கடத்தலைத் தடுக்க பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் 19 செக்-போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News April 9, 2026
புதுச்சேரி: 1099 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தீவிரம்

30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள புதுச்சேரிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது இதனை ஒட்டி 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் புதுச்சேரியில் உள்ள 1099 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.


