News March 27, 2024
வாணியம்பாடி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுக்க சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணியாற்றி போலிசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .காவல் நிலையத்தில் வரும் பொது மக்களிடம் பெறும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 10, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News April 10, 2025
LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பு துறை, சமூக வலைதள பக்கத்தில் LOAN APP மூலம் பரிவத்தனை செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற லோன் ஆப்பில் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, மிரட்டப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, LOAN APP மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 10, 2025
மருத்துவமனை ஓனர் மீது மாணவிகள் பாலியல் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நிஷா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு, மருத்துவமனை ஓனர் ஜாவித் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இன்று அம்பலூர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜாவித்திடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.