News August 26, 2024
வாணியம்பாடி அருகே மாடுகளை ஏற்றி சென்ற லாரியை மடக்கி தகராறு

வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்க சாவடி வழியாக இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றி லாரி ஒன்று சென்றது. அதனை மடக்கி முன்னாள் இந்து மகாசபா நிர்வாகி ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், மணியரசு ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த அம்பலூர் காவல் துறையினர் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.
News March 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


