News September 7, 2025
வாணியம்பாடி அருகே மரக்கடையில் தீ விபத்து

வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீ பரவாமல் தடுக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது, தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
வேலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான 153 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News September 14, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 13, 2025
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 153 மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் ,சேர்த்தல், திருத்தம், மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 153 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.