News March 20, 2024
வாணியம்பாடி அருகே பெண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் 20.03.2024 இன்று காலை 9 மணியளவில் விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த மது பிரியா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
News August 14, 2025
திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.