News November 7, 2025
வாணியம்பாடியில் பாலாறு பெருவெள்ள நினைவு சதுக்கம்!

வாணியம்பாடி நகரப் பகுதியில் 1903 ஆம் ஆண்டில், பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு நகர பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், வருகின்ற (நவ.12) அன்று 122 ஆம் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, சந்தை மைதானம் அருகில் வெள்ளப்பெருக்கில் உயிர் நீத்தவர்களின் நினைவாக ‘பாலாறு பெருவெள்ள நினைவு சதுக்கம்’ அமைக்கும் பணி தனியார் அறக்கட்டளை சர்பாக நடைபெற்று வருகிறது.
Similar News
News November 7, 2025
திருப்பத்தூர் வந்தடைந்த 200 டன் யூரியா!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு சார்பில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தனியார் உர கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை சார்பில் இன்று (நவ.7) சுமார் 200 டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
News November 7, 2025
திருப்பத்தூர்: சாலை பாதுகாப்புதுறை ஆணையர் ஆய்வு

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து இன்று (07) திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு துறை ஆணையருமான கஜலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உடனிருந்தார்.
News November 7, 2025
திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


