News December 9, 2024

வாட்ஸ் அப் லிங்க் மோசடி: போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர். இந்த வரிசையில் வாட்ஸ் அப் லிங்கில் சென்று பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு பல மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வருகிறது. ஏமாற்றப்பட்டவுடனேயே தெரிந்து கொண்டு சைபர் கிரைம் போலீசின் உதவியை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மட்டுமே பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது என சைபர் போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News March 3, 2026

நாங்குநேரி கொலை தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

நேற்று நான்குநேரியில் இரண்டு பேர் அருவாளால் வெட்டி படுகொலை நடந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பாளையம்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சட்டம் ஒழுங்கு மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி திருநெல்வேலி சரக டி ஐ ஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2026

நெல்லை: பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – விஜய்

image

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக ஆட்சியை மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிராகரிப்பார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.

News March 3, 2026

திருநெல்வேலி: மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

image

நாங்குநேரியில் நேற்று இரவு நடைபெற்ற <<19285126>>அசம்பாவித<<>> சம்பவத்தில் மாற்றுத்திறனாளி ஜான்மார்க்(49) என்பவரும், அந்த பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!