News October 14, 2024

வாட்ஸ்அபில் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர்

image

நாளை காஞ்சிபுரத்திற்கு கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, மாவட்டத்தில், 72 வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் 11 துறை அதிகாரிகள் கொண்ட 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ள பாதிப்புகள் பற்றி 044-27237107 என்ற தொலைபேசி எண்ணிலும், 80562 21077 என்ற மொபைல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

Similar News

News November 20, 2024

காஞ்சிபுரத்தில் நாளை மின்குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம், நாளை (நவ.21) வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் தொடர்பான அனைத்து குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

இந்தியில் மாறிய LIC இணையதளம்: திருமா கண்டனம்

image

காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, LIC இணையதளத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

News November 20, 2024

45 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் பலி

image

சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.