News March 29, 2025
வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கொலையை தடுத்த போலீஸ்

வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் அறிவால் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சமயநல்லூரைச் சேர்ந்த சூர்யா 23, கண்ணன் 23 என்பதும் ஜாமினில் வெளிவந்த சரண் என்பவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்தது தெரயவந்தது.
Similar News
News April 1, 2025
திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்கள் செல்ல தடை

திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News April 1, 2025
மதுரையில் வேலை வாய்ப்பு

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News April 1, 2025
மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.