News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 1/2

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்னை, குடிநீர் பிரச்னை, கரண்ட் பிரச்னை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க வீட்டு உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ உதவி எண் (1800 599 01234) காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரியிடம் (9445000413, 9444964899) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி
Similar News
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
News July 8, 2025
செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்” எனத் தெரிவித்தார்.